திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும்.. பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந்தால், அவர்களது உணர்வுகள் புண்படுத்தப்படாமல் இடமாற்றம் செய்யப்படுவார்கள் – திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த பின் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேட்டியில் கூறியதாவது.. திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள ஏழு மலைகளும் தேவஸ்தானத்திற்கு மட்டுமே சொந்தமானது.
அதனை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. கோயில் அமைந்துள்ள மலைகளில் வணிக நோக்கத்துடன் செயல்பட யாருக்கும் அனுமதி இல்லை. மலை அடிவாரத்தில் தனியார் ஓட்டல்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.27 ஏக்கர் நிலம் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும் – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.