Skip to content

பொள்ளாச்சி…. மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் ரவி இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் சென்ட்ரிங் தொழிலாளியான ரவி பொள்ளாச்சி ஏபிடி சாலையில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது கட்டிடத்தில் இருந்த இரும்பு கம்பி அருகில் இருந்த மின் கம்பத்தில் உரசியது இதில் கட்டிடத்தில் இருந்த ரவி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார் கட்டிடத்தின் ஒரு பாதியில் உடம்பு முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய வரை அருகில் இருந்தோர் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ரவியை கொண்டு சென்றனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவி மீது மின்சாரம் பாய்ந்து துடி துடித்து உயிருக்கும் போராடும் பதபதைக்கும் வீடியோ காட்சிகள் காண்போரை கண் கலங்க வைப்பதாக உள்ளது

error: Content is protected !!