Skip to content

அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள்…. தவெக தலைவர் விஜய் விமர்சனம்..

அதிமுக -பாஜக கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள் என தவெக தலைவர் விஜய் விமர்சனம்  செய்து அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது…

2026 தேர்தலில் தவெக தான் திமுகவுக்கு எதிரான ஒரே அணி. அதிமுக பாஜக கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள். பழைய பங்காளியான அதிமுக-வை பகிரங்க கூட்டாளியாக பாஜக மீண்டும் கைபிடித்ததில் ஆச்சரியமில்லை.  பிளவுவாத சக்திகளுக்கு சாமரம் வீசிய காரணத்தால் 3 முறை மக்களால் நிராகரிக்கபட்ட கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. திமுகவுடன் மறைமுக கூட்டணியில் உள்ள பாஜக, பகிரங்க கூட்டாளியாக அதிமுகவை மீண்டும் கைப்பிடித்துள்ளதாக விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

error: Content is protected !!