Skip to content

தியேட்டரில் ஔிரும் லைட் விழுந்து பெண் காயம்…. பரபரப்பு…

  • by Authour

குட் பேட் அக்லி படம் பார்த்து கொண்டிருந்த ரசிகையின் தலையில் ஔிரும் லைட் விழுந்த நிலையில், தியேட்டர் ஊழியர்களுடன் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.30.9 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில், குட் பேட் அக்லி படம் பார்த்து கொண்டிருந்த ரசிகையின் தலையில் ஔிரும் லைட் விழுந்ததால் தியேட்டர் ஊழியர்களுடன் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அஜித் படத்தை பாதியிலேயே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களை குரோம்பேட்டை போலீசார் சமாதானம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

error: Content is protected !!