Skip to content

நடிகர் கார்த்திக்கு ஜோடியாகும் நயன்தாரா…!

  • by Authour
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சுந்தர்.சி தமிழில் பல வருடங்களுக்கு மேல் வெற்றி படங்கள் தந்து முன்னனி இயக்குனராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த ‘மதகஜராஜா’ படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது சுந்தர். சி ‘மூக்குத்தி அம்மன் 2 ‘  படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சுந்தர். சி இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் நடிகர் கார்த்தியை எதார்த்தமாக சந்தித்த வேளையில் கார்த்தியிடம் ஒரு புதிய படத்திற்கான கதையை கூறியதாகவும் அதில் நடிக்க கார்த்தி ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. nayanthara
இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மூக்குத்தி அம்மன் 2 படத்தை முடித்தவுடன் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன் இருவரும் காஷ்மோரா படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!