தவெக பூத் கமிட்டி மாநாடு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்றும், நாளையும் நடக்கிறது.இதில் கலந்து கொள்ள கட்சித் தலைவர் நடிகர் விஜய் தனி விமாம் மூலம் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு 11 மணி அளவில் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை பார்க்க கட்சி நிர்வாகிகள் ,தொண்டர்கள், ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். விமான
நிலையத்தில் தயாராக நின்றிருந்த பிரசார வாகனத்தில் ஏறி விஜய் மாநாடு நடைபெறும் கல்லூரிக்கு புறப்பட்டார். வழி நெடுகிலும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் கட்சியின் துண்டை விஜய் மீது எறிந்தனர். அவரும் அதை பிடித்து தொண்டர்கள் மீது எறிந்தவாறு சென்றார்.