கோவையில் நடந்த தி.மு.க மகளிர் அணி கலந்தாய்வு கூட்டத்தில் கனிமொழி எம்.பி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது :
அணி கருத்தரங்கில் பேசிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணியின் தேர்தல் பணி செயல்பாடுகள் குறித்து பேசினார்கள். இதெல்லாம் மனசுல வைத்துக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் மனசுல வச்சுக்காதீங்க வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலையும் இந்த சகோதரிகள் உடைய உழைப்பை மனதிலே நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் மகளிர் அணி நிர்வாகிகளுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று எங்களை பாராட்ட வேண்டாம் உங்களுக்கு என்னென்ன எதிர்பார்ப்பு இருக்கோ அதே எதிர்பார்ப்பு இங்க இருக்கக் கூடிய சகோதரர்களுக்கும் இருக்கிறது. என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் எதிலும் எங்களை மறந்து விட வேண்டாம் என்பதை நான் இங்கு உங்களிடம் ஒரு வேண்டுகோளாக நான் வைக்க விரும்புகிறேன். இன்று ஆண்களுக்கு நிகராக இந்த சமூகத்திலே எங்களாலும் உழைக்க முடியும் எங்களாலும் செயல்பட முடியும் என்பது தான்.
ஒரு பெண்ணுக்கு கல்வி என்பது தொடர்ந்து மறுக்கப்பட்ட காலகட்டம் இருந்தது. இதையெல்லாம் இன்று உடைத்த இன்னைக்கு தமிழ்நாட்டுல நம்முடைய முதலமைச்சர் பெருமையோடு
சொல்கிறார்களே இந்தியாவுடைய வேலைக்குச் செல்லக் கூடிய மகளிர்ல 42 சதவீதம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். ஆனால் மத்தியில் உள்ளவர்கள் புதிய கல்விக் கொள்கை என்று நமக்கு சொல்லித் தர வருகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையில் சொல்லி இருக்காங்க இல்லையா, அதை தாண்டி நிற்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு அதை விட தமிழ்நாட்டிலேயே உயர்ந்த கல்வியை தொட்டுக் கொண்டு இருக்கக் கூடிய பெண்கள் தேசிய சராசரியை விட மிக அதிகமாக இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு இப்படி இத்தனை தடைகளையும் தாண்டி இன்று நாம் இந்த இடத்தில் நின்று கொண்டு இருக்கிறோம்.
கலைஞரின் ஆட்சியில் நீட்சியாக இந்த ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கக் கூடிய நம்முடைய முதலமைச்சர் பெருமை மிகுந்த ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்ற அந்த பெருமை உங்கள் அத்தனை பேர் மனதிலும் இருக்க வேண்டும் அதைத் தாண்டி நிறைய பேர் கேட்கலாம் ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சனையை எழுப்பிட்டு இருக்காரு பி.ஜே.பில் கேக்குறாங்க இந்த முதலமைச்சர் இருக்கு ஆட்சியை நடத்துறாரா ? எப்ப பாத்தாலும் எங்களோட சண்டைக்கு வராரு அவருக்கு என்ன ஆசையா நீங்க மொழி மொழியை பற்றி ஏன் பேசுறாங்க நீங்க கொண்டு வந்த மொழிய திணிக்கும் பொழுது எதிர்க்காமல் தமிழர்களுடைய ஒரு தலைவனாக தமிழர்களுடைய அமைச்சராக, தமிழர்களுடைய பிரதிநிதி அதை எதிர்த்து நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் ஆளாக்கப்படுகிறார் ..
அறிவியல் வளர்ந்து விட்டது அந்த அறிவியலை சொல்லி தரக் கூடிய ஆட்சியாக தான் நம்முடைய ஆட்சி நடக்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நினைக்கிறார்கலே தவிர நீங்க திரும்பத், திரும்பத், திரும்ப மொழியை கொண்டு வந்து திணிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது .
காலை எழுந்த உடனே இப்ப எல்லாருக்கும் பழகிடுச்சு போனை எடுத்து முதல்ல பார்க்கிறோம் குட் மார்னிங் மெசேஜ் எல்லாம் போடுறீங்க நானும் பாக்குறேன் மகளிர் அணி எல்லாம் நிறைய குட்மார்னிங் மெசேஜ் வருது. இதுதான் உண்மை இது பொய் என்று வாட்ஸ் அப்பில் சோசியல் மீடியாலையோ வரக் கூடிய செய்திக்கு பதில் அனுப்புங்க.
மாவட்ட செயலாளர்கள் பொறுப்பிலே இருக்கக் கூடியவர்களிடம் எடுத்துச் சொல்லி அதை சரி செய்ய இன்றில் இருந்து நான் போராட வேண்டும் வரக் கூடிய தேர்தல் களத்திலே மட்டும் போராட வேண்டிய அவசியம் இருக்காதா இதை தாண்டி பல போராட்டங்களை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் ஏன்னா அவங்களுக்கு நம்ம அரசியல் எதிரிகள் மட்டுமில்லை, கொள்கை எதிரிகள் என்பதை நாம் நினைவிலே வைத்துக் கொண்டு இந்த தேர்தலிலே நம்முடைய வெற்றி என்பது வெறும் தேர்தல் வெற்றி இல்லை அது நம்முடைய திராவிட இயக்கத்தின் வெற்றி நம்முடைய கொள்கைகளின் வெற்றி அந்த கொள்கையை அடுத்த தலைமுறை அடுத்த தலைமுறைக்கு என்று எடுத்துச் நினைவில் வைத்துக் கொண்டு போராடுங்கள் நன்றி வணக்கம்.
