சிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (27 ). இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தார்.ரியல் எஸ்டேட் மற்றும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். நேற்று பிற்பகல் பிரவீன்குமார், சாமியார்பட்டியில் உள்ள அவரது தோப்பில் இருந்தார். அப்போது டூவீலரில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றது.
உடனடியாக அவரை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் பிரவீன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக சாமியார்பட்டியைச் சேர்ந்த விக்கி (எ) கருணாகரன்(20 ), சிவகங்கையைச் சேர்ந்த பிரபாகரன்(19 ), திருப்பத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த குரு (21) ஆகிய 3 முறை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். முன்னதாக பிரவீன் குமாரின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா.
