கரூரில் மூத்த வழக்கறிஞரை கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் பணம், தங்கச் செயின்கள், தங்க காசுகளை கொள்ளையடித்த அவரிடம் பணிபுரிந்த ஜூனியர் வழக்கறிஞர் தனது நண்பர்களுடன் கை வரிசை – சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம் (வயது 71). இவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முந்தினம் இரவு வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் 3 பேர் முகத்தில் மாஸ்க் அணிந்து கத்தியுடன் வீட்டினுள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் வழக்கறிஞர் ஆறுமுகத்தின் முகத்தில் குத்தியும் உள்ளனர்.
அப்போது வழக்கறிஞர் வீட்டில் இருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க செயின்கள், தங்க காசுகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வழக்கறிஞர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கரூர் – திருச்சி சாலையில் தெரசா கார்னர் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்ததில் அவர் கொளந்தாகவுண்டனூர் ராஜீவ் காந்தி என்றும், அவருடைய நண்பர்கள் சாய்பாபா நகரை சார்ந்த பிரசாந்த், முத்து நகரை சார்ந்த மற்றொரு பிரசாந்த் ஆகியோருடன் சேர்ந்து வழக்கறிஞர் ஆறுமுகம் வீட்டில் கத்தி முனையில் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர். கொள்ளை சம்பத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், 5 பவும், ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலிகள், 50 கிராம் எடையுள்ள 45 தங்க காசுகள், ரேடார் தங்ம வாட்ச் 2 ஆகியவற்றை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் முக்கிய குற்றவாளியான ராஜீவ்காந்தி ஜூனியர் வழக்கறிஞராக வழக்கறிஞர் ஆறுமுகத்திடம் வேலை பார்த்து வந்துள்ளாதாகவும், நண்பர்களுடன் சேர்ந்து தன்னுடைய சீனியரிடமே கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. வழக்கறிஞர் ஆறுமுகத்தின் மகன் மற்றும் மகள் நீதிபதிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
