நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வின், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். இதனைத்தொடர்ந்து, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு நடிகர் அஜித் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: ”பஹல்காம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எண்ணி நான் வருந்துகிறேன். இந்த விவகாரத்தில் அரசு தன்னால் முடிந்ததை நிச்சயம் செய்யும் என்று நம்புகிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்.
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். டெல்லியில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்களை நான் கண்டிருக்கிறேன். எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த சூழலில், சாதி மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது. அமைதியாகவும், ஒற்றுமையாகவும் நாம் வாழ வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.