இந்தியாவுடன் மோதலுக்கு இறங்கினால், நான்கு நாள் கூட, அதனால் தாக்குப்பிடிக்க முடியாது என சர்வதேச போர் தந்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான நிதி பற்றாக்குறையால் தவிக்கிறது. எந்த ஆட்சியும் முழு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ததில்லை. அடிக்கடி ராணுவ புரட்சிகள் வெடிக்கின்றன. பதவிக்கு வருவோர், இருக்கும் சொத்தை அபகரித்து செல்கின்றனர். இதனால், ஆயுள் காலத்தில் பல நாட்கள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலை உள்ளது. தற்போது, இந்தியாவுடன் போருக்கு தயாராகியுள்ள பாகிஸ்தான், பீரங்கி வெடிமருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. ரஷ்யா – உக்ரைன் போரில், பாகிஸ்தான் எந்த நாட்டுடனும் அணி சேரவில்லை. எனினும், உக்ரைன் நாட்டுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து, தனது போர் தளவாட இருப்புக்களை ஒட்டுமொத்தமாக காலி செய்தது. பாகிஸ்தான் வெடிமருந்து தொழிற்சாலைகளில், அதிநவீன வசதிகள் இல்லை. பெரிய அளவில் இருப்பு வைக்கும் திறனும் இல்லை. காலாவதியான உற்பத்திப் பொருட்களால், வெடிமருந்து தயாரிப்பும் தேவைக்கு ஏற்ப இல்லை. இதனால் வெடிமருந்து இருப்பு நான்கு நாட்கள் கூட தாக்குப்பிடிக்காது. பாகிஸ்தான் ராணுவம், பீரங்கி படைகளை அதிகம் சார்ந்துள்ளது. ஆனால், பீரங்கிகளுக்கு ஏற்ற வெடி பொருட்கள் இல்லாத நிலையில் அதன் நிலை மிகவும் மோசமாகும் என்கின்றனர் முன்னாள் ராணுவ அதிகாரிகள்..
போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது
- by Authour
