Skip to content

தஞ்சை..விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்த தோழப்பன் என்பவரின் மகன் சரவணன் (45). விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஞானபாண்டியன் என்பவரின் மகன் அலெக்ஸ்பாண்டியன் (25). விவசாய கூலி தொழிலாளி. சரவணனும், அலெக்ஸ்பாண்டியன் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட் ஷிப்தான் என்று பாட்டு பாடாத குறையாக எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது, மது அருந்தினாலும் ஒன்றாக சென்று அருந்துவது என்று இருந்து வந்துள்ளனர்.

சரவணனும், அலெக்ஸ்பாண்டியனும் அவ்வப்போது ஒன்றாக மது அருந்தி வருவது வழக்கம். இதில் சமீபத்தில் போதையில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ப்ரெண்ட் ஷிப் மூழ்கிய ஷிப் ஆக மாறியது. எதிர் எதிரே வந்தாலும் இருவரும் பேசிக் கொள்வதில்லை. அவ்வப்போது சரவணன் மது அருந்தி விட்டு, அலெக்ஸ் பாண்டியனை திட்டி வந்தால் வாய்த்தகராறு, முன்விரோதமாக மாறி விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 3ம் தேதி, சரவணன் வீட்டிற்கு அலெக்ஸ்பாண்டியன் வந்துள்ளார். நல்ல நண்பர்களாக இருந்தோம். இப்போது நாம் பேசிக் கொள்வதே இல்லை. எனவே இருவரும் சமாதானமாக சென்று விடுவோம் என கூறி, மீண்டும் மது அருந்த பைக்கில்அழைத்து சென்றுள்ளார். இவர்கள் இருவரும் பைக்கில் செல்வதை பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும், சரவணனின் தம்பி சசிக்குமார் (44) பார்த்துள்ளார்.

அலெக்ஸ்பாண்டினுக்கும், சரவணனுக்கும் ஏற்கனவே மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது சசிக்குமாருக்கும் தெரியும். இப்போது திடீரென்று அலெக்ஸ்பாண்டியன் தனது அண்ணனை பைக்கில் அழைத்து செல்வதை பார்த்ததால் சசிக்குமார் சந்தேகம் அடைந்து அலெக்ஸ்பாண்டியன் சென்ற சிறிது நேரத்தில் தனது பைக்கில் சென்று பார்த்துள்ளார்.

அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத ஆற்றங்கரை பகுதியில், அலெக்ஸ்பாண்டியனும், சரவணனும் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்ததை சசிக்குமார் பார்த்துள்ளார். அப்போது திடீரென்று அலெக்ஸ் பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரவணனை தலை, முகம், கை என்று சரமாறியாக வெட்டியுள்ளார். இதை பார்த்து சத்தம் போட்டப்படி சசிக்குமார் ஓடி வந்ததால் அலெக்ஸ்பாண்டியன் அரிவாளோடு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அரிவாள் வெட்டு விழுந்து படுகாயமடைந்த தன் அண்ணன் சரவணனை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சசிக்குமார். சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சரவணன் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சசிக்குமார் சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!