Skip to content

கரூரில் டென்னிஷ் அகாடமியை காணொளி வாயிலாக துணை முதல்வர் திறப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து கரூர் மாவட்டத்தில் டென்னிஸ் அகாடமியை காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டனர் . தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மூலம் தமிழ்நாட்டை மாநிலமாக விளையாட்டில் முதன்மையான உருவாக்குவதுடன் தனிநபர்களுக்கான விளையாட்டுகளை முழு திறனுடன் அணுகவும் , அவர்கள் உயர்மட்ட போட்டிகளில் பங்குபெற்று சிறப்படையவும் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள் . தமிழ்நாடு அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நலனின் மேம்பாட்டில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பல்வேறு திட்டங்களுக்கு தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி வருகிறது .

துணை முதலமைச்சர் அவர்கள் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மான்யகோரிக்கையின் போது அனைத்து மாவட்டங்களிலும் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் – STAR ( SPORTS TALENT ADVANCEMENT & amp ; RECOGNITION ) அகாடமி அமைக்கப்படும் என அறிவித்தார்கள் . இந்த அறிவிப்பின் அடிப்படையில் , கரூர் மாவட்டத்திற்கு இம்மையத்தில் டென்னிஸ் விளையாட்டு தலைமையகம் மூலம் ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ளது . இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ .3,67,500 / – ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது . இப்பயிற்சி மையத்திற்கான 24.04.2025 அன்று நடைபெற்ற பயிற்றுநர் தேர்வில் மாவட்ட அளவிலான தேர்வு குழு உறுப்பினர்கள் மூலம் ஸ்ரீனிவாசராவ் அவர்கள் டென்னிஸ் பயிற்றுநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . மேலும் , 28.04.2025 அன்று நடைபெற்ற மாணவ / மாணவியர்களுக்கான தேர்வில் 23 மாணவர்கள் மற்றும் 12 மாணவிகள் பங்குபெற்றனர் . தேர்வு குழு மூலமாக 20 மாணவர்கள் மற்றும் 12 மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர் .

இதனைத் தொடர்ந்து , மாவட்ட ஆட்சியர் தங்கவேல் , விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு தலா ரூ .2500 / – மதிப்பிலான விளையாட்டு சீருடைகள் மற்றும் விளையாட்டு காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குணசேகரன் , தடகளப் பயிற்றுநர் சபரிநாதன் , ஸ்டார் அகாடமி டென்னிஸ் பயிற்றுநர் ஸ்ரீனிவாசராவ் , கேலோ இந்தியா ஜூடோ பயிற்றுநர் சண்முகம் மற்றும் தொடர்படைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

error: Content is protected !!