மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பிரமுகர் சரண்யா, இவரது கணவர் சண்முக சுந்தரம். இந்த தம்பதிக்கு சாமுவேல்(15), சரவணன்(13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சண்முக சுந்தம்2021ல் இறந்து விட்டார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சரண்யா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தை சேர்ந்த பாலன் என்பவரை 2ம் திருமணம் செய்து கொண்டார். பாலன் ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இருவரும்வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றபோதிலும் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது.
அதே நேரத்தில் பாலனின் முதல்மனைவி , அவரது பிள்ளைகளுக்கு பாலன், சரண்யா திருமணம் பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே விரோதம் மூண்டது. இந்த நிலையில் தான் நேற்றுஇரவு சண்யா தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். அவரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை பட்டுக்கோட்டை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே இன்று காலை 11 மணி அளவில் மதுரை கோர்ட்டில் கபிலன், குகன், பார்த்திபன் ஆகியோர் இன்று மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களில் கபிலன், பாலனின் முதல் மனைவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அம்மரின் வாழக்கையில் குறுக்கிட்டதால் சரண்யா கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.