Skip to content

மூதாட்டி படுகொலை… கை-கால் கட்டி கிணற்றில் வீச்சு…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப. முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி நாகம்மாள் (65). இவரது கணவர் கேத்தாண்டப்பட்டி சுகர் மில்யில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 10வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில் கணவனின் பென்சன் வாங்க மாதம் ஒரு முறை கேத்தாண்டப்பட்டி சுகர் மில் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகம்மாள் பென்சன் வாங்க சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கூத்தாண்டக்குப்பம் பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றில் கால்கள் இரும்பு கம்பியால் கட்டி சடலமாக மிதந்து உள்ளதை அக்கம் பக்கத்தினர் பார்த்து தகவல் அளித்ததின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மூதாட்டின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த படுகொலை செய்து விட்டு தலைமறைவாகி உள்ள கொலையாளிகளை பிடிக்க ஜோலார்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

error: Content is protected !!