Skip to content

+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ம் தேதி தேர்வு….

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி, 25ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ் பாடத்தில் 135 பேர் 100 க்கும் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.  பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!