பிளஸ்2 தேர்வில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு எழுதிய 289 மாணவ, மாணவிகளும்ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் இப்பள்ளி மாணவிகளே பெற்றுள்ளனர். மாவட்டளவில் முதல் இடத்தை சுவேதா என்ற மாணவி பெற்றுள்ளார். அவர் 600 க்கு 596 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் .தமிழ் பாடத்தில் 100, ஆங்கிலத்தில் 97, பௌதீகத்தில் 100, கெமிஸ்ட்ரி 100, பயாலஜியில் 99 கணிதத்தில் 100 என 596 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
மாவட்ட அளவில் இரண்டாவது இடத்தையும் இப்பள்ளி மாணவியே பெற்றுள்ளார். மாணவி கீர்த்திகா 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். தமிழில் 99 ஆங்கிலத்தில் 98, பெளதீகத்தில் 100,கெமிஸ்ட்ரியில் 98 , பயாலஜியில் 98, கணதத்தில் 100 என 593 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாவட்ட அளவில் மூன்றாவது இடத்தையும் இப்பள்ளி மாணவி பாலசுந்தரி பெற்றுள்ளார். 600க்கு592 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 99, ஆங்கிலத்தில் 96, பௌதீகத்தில் 99, கெமிஸ்ரியில் 100, பயாலஜியில 98, கணதத்தில் 100 என 600க்கு 592 மதிப்பெண் பெற்றுள்ளார். அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் ஜோனதன் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.