Skip to content

கோவை-வௌ்ளியங்கிரி கோவிலுக்கு வந்த 2வது கும்கி யானை சின்னதம்பி…

கோவை, வெள்ளியங்கிரி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்புக்காக வந்த இரண்டாவது கும்கி யானை சின்னத்தம்பி !!!

கோவை, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வனத்துறையினர் இரண்டாவது கும்கி யானையை வரவழைத்து உள்ளனர்.

கோவை,
வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து, பக்தர்கள் அச்சத்துடன் மலையேற்றம் மேற்கொண்டு வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, டாப்சிலிப் வனச் சரகத்தில் இருந்து ஏற்கனவே நரசிம்மன் என்ற கும்கி யானை வர வழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. தற்போது, பக்தர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, சின்னத் தம்பி என்ற மற்றொரு கும்கி யானையும் வர வழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் இணைந்து உள்ளது.
சின்னத்தம்பி கும்கி யானை இதற்கு முன்பு தடாகம் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்து வந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்பட்டு கும்கி யானையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு கும்கி யானைகளும் வெள்ளியங்கிரி கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

error: Content is protected !!