Skip to content

அம்மா குடிநீர் திட்டத்தை மூடியது தான் அதிமுக சாதனை:கரூரில் செந்தில் பாலாஜி பேச்சு

கரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஏழு இடங்களில் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மத்திய கிழக்கு பகுதி கழகம் சார்பில் பசுபதிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு  பேசினார்.  அவர் பேசியதாவது: தம்பிதுரை என்ற பை-பாஸ் ரைடர் இருந்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு வழிச்சாலை, எட்டு வழி சாலை என்று தெரிவித்தனர். அது தேர்தலுடன் முடிந்துவிட்டது. தற்பொழுது திமுக ஆட்சி காலத்தில் 134 கோடி கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். வெட்கமே இல்லாமல், சூடு சொரணை இல்லாமல் மேடை போட்டு சிலர்  (அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்) பேசுகின்றனர். நான் இருக்கும் பொழுது கரூரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிலர் ஒன்றுமே செய்யாமல், அனைத்துமே நாங்கள் செய்தோம் என பொய்யை தவிர வேறு எதுவுமே பேசுவதில்லை. போக்குவரத்து துறையில் கடந்த  ஆட்சியில்  ஒரு திட்டத்தையாவது கரூருக்கு கொண்டு வந்தார்களா? தகுதி இல்லாதவர்கள், அருகதை இல்லாதவர்கள் மேடை போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கட்சி தலைமை எப்படியோ அதே போன்று தான் அவர்களும், பொய் சொல்வதே வாடிக்கையாக உள்ளது. திமுக ஆட்சியில் நான்காண்டு சாதனை திட்டங்களை பொறுத்துகொள்ள முடியாமல் அவதூறுகளை பரப்ப முயற்சி செய்கின்றனர். மின்துறையில் கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார். நான் இருக்கும்போது அம்மா குடிநீர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு மூடு விழா கண்டது தான் அதிமுகவின் சாதனை. திமுக ஆட்சியில் கரூர் மாவட்டத்திற்கு 3000 கோடி அளவிற்கு பல்வேறு திட்டங்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு  அவர் கூறினார்.
error: Content is protected !!