Skip to content

திருச்சி அரசு விழாவில் ராணுவத்துக்கு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்

திருச்சி பஞ்சப்பூரில்   ரூ.408.36 கோடியில்  புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது.  இந்த பஸ் நிலையத்திற்F  கலைஞர் மு. கருணாநிதிதி பேருந்து முனையம்  என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த  பேருந்து நிலையத்தை இன்று  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து அங்கு  நிறுவப்பட்டுள்ள  கருணாநிதி, பெரியார், அண்ணா சிலைகளை திறந்து வைத்தார்.  பின்னர் பேட்டரி காரில் ஏறி  பஸ் நிலையத்தை சுற்றிப்பார்த்தார். அவருடன் அமைச்சர்கள் நேரு, அன்பில்  மகேஸ் , சிவசங்கர்  ,  ரகுபதி,  மெய்யநாதன் ஆகியோரும் அந்த காரில் பயணித்தனர். பின்னர்  கொடியசைத்து புதிய  பஸ்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.அதைத்தொடர்ந்து  விழா  தொடங்கியது. மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் வரவேற்று பேசினார். பின்னர் முதல்வர் உள்ளிட்ட  அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.  முதல்வர் ஸ்டாலின்  50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு  வீட்டுமனை பட்டாக்கள் உள்பட  ரூ.830 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், 276.95 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,  காய்கறி அங்காடிக்கும்,  அண்ணா கனரக சரக்கு வாகன முனைத்தை திறந்து வைத்தும்   விழா பேரூரையாற்றினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின், விழா மேடைக்கு வந்ததும்  இந்திய எல்லையில் நமது ராணுவம் நாட்டை காக்க தீரத்துடன் போர் புரிவது குறித்து பேசி நமது  ராணுவத்துக்கு எப்போதும் துணை நிற்போம் என்று கூறியும்,  பாகிஸ்தான்  தாக்குதலில் மறைந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தியும்   சல்யூட் அடித்தார்.  அப்போது அனைவரும்  சல்யூட்  செய்தனர். இதனால் விழா பந்தலில் அமர்ந்திருந்த பல்லாயிரகணக்கான மக்களும்  தேசப்பற்றுடன் மெய்சிலிர்த்தனர்.  
error: Content is protected !!