2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 74 போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடந்த 8ம் தேதி இரவு இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் பஞ்சாப், டில்லி அணிகள் மோதின.
முதலில் பஞ்சாப் பேட் செய்தது. 10.1 ஓவர் நடந்து கொண்டிருந்தபோது போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது போட்டி நிறுத்தப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. மின்தடை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
9ம் தேதி காலை தான் ஐபிஎல் போட்டி நிறுத்தப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் என தெரிவிக்கப்பட்டது. 58வது போட்டியுடன் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சியிருப்பது 16 போட்டிகள் தான்.
இதையும் நடத்தி விடலாம். தென் மாநிலங்களில் போட்டியை நடத்தலாம். குறிப்பாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் நடத்தலாம் என பிசிசிஐக்குள் ஒரு கருத்து உருவானது. அதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல், ஐபிஎல் போட்டி ஒருவாரம் தான் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
புதிய அட்டவணை உருவாக்கப்பட்டு எஞ்சிய போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்தார். எனவே 20ம் தேதிக்கு பிறகு போட்டிகளை தொடங்கி ஜூன் 1ம் தேதியுடன் நிறைவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. போர் பதற்றம் தணிந்தால் அது சாத்தியம் தான் என பிசிசிஐ நம்புகிறது.
இதற்கு முன்பும் இரண்டு முறை ஐ.பி.எல் இதே மாதிரி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா காரணமாக சீசன் தொடங்குவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
திடீரென கொரோனா இரண்டாம் அலை உச்சம் பெற, தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், இரண்டாம் பாதி ஆட்டங்கள் செப்டம்பர், அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்திருந்தது.