கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக வந்த நடிகை பிரியா வாரியர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது தான் கல்லூரி மாணவியாக இருந்த போது கல்லூரி விழாக்களில் பங்கேற்க இயலவில்லை என்றும் அதனால் தற்போது இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ளேன் என்றும் கூறினார்.
தனக்கு நடிகர் அஜித் குமாரை மிகவும் பிடிக்கும் எனவும் அவரது படத்தில் நடித்தது மிகப்பெரிய ஒன்று என்றும் கூறினார். அஜித் மட்டுமின்றி குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும் தனக்கு சிறந்த ஒத்துழைப்பு அளித்ததாகவும் மலையாளம் மற்றும் தமிழ் இன இரண்டு மொழிகளுமே தனக்கு தெரியும் என்பதால் எந்த ஒரு வித்தியாசமும் தனக்கு தெரியவில்லை எனவும் தமிழ் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறியதுடன் குட் பேட் அக்லி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தாலும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழக மக்கள் தந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய கதைகள் கேட்டுள்ளதாகவும் அதிக அளவிலான படங்களில் நடிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
