Skip to content

எடப்பாடி பிறந்தநாள்: திருச்சி தெற்கு அதிமுக அன்னதானம்

அதிமுக பொதுச்செயலாளர்,  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 71 வது பிறந்த நாள் வரும்  12ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் வேண்டாம் என  எடப்பாடி கூறியிருந்தார். இதையொட்டி  திருவெறும்பூர்  சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அருள்மிகு ஶ்ரீ திருநெடுங்களநாதர் திருக்கோவிலில் மாவட்ட அம்மா பேரவை சார்பாக சிறப்பு அபிஷேகம் மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது .

விழாவுக்கு வருகை தந்த திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளர்  ப.குமார் Bsc.,BL.Ex.MP  அன்னதானத்தை  துவக்கி வைத்து அன்னதானம் வழங்கினார் .

விழாவை ஏற்பாடு செய்த திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சூரியூர் ராஜா மணிகண்டன் ,  திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் .S.K.D.கார்த்திக் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் S.S. ராவணன் மாவட்ட துணைச் செயலாளர் .சுபத்ரா தேவி மாவட்ட அவைத்தலைவர்அருணகிரி ,துவாக்குடி நகரக் கழகச் செயலாளர் பாண்டியன் ,கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார் அது சமயம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ,ஒன்றிய கழகச் செயலாளர்கள், பகுதிகழகச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும்  திரளாக கலந்து கொண்டனா்.

error: Content is protected !!