செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்..
மனுவில் தாம் சென்னையைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மூலமாக கோவையைச் சேர்ந்த சஞ்சய் குமார் ரெட்டி என்பவருது அறிமுகம் கிடைத்ததாகவும் இந்நிலையில் அவரிடம் தாம் வெளிநாடு வேலைக்கு செல்வதாக கூறிய போது சஞ்சய் குமார் ரெட்டி தான் வெளிநாட்டு நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாக கூறியதாக தெரிவித்திருந்தார் இதனை தொடர்ந்து அவரிடம் தாமும் தனது நண்பர்களும் வெளிநாடு சென்று வேலைக்கு செல்ல விரும்பியதை கூறிய நிலையில் அவரிட்ட் நண்பர்கள் பணம் உட்பட எனது பணத்தையும் அவரிடம் வழங்கியதாக தெரிவித்திருந்தார்.. இந்நிலையில் அவர் மோசடி செய்ததாக அறிந்த நிலையில் அவர் மீது தற்போது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்
இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் கார்த்திகேயன் செய்தியாளிடம் கூறுகையில் மோசடியில் ஈடுபட்டுள்ள சஞ்சய் குமார் ரெட்டி இதே போல தஞ்சாவூர் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் அவர் மீது மோசடி வழக்கு இருப்பதாக கூறிய அவர் வெளிநாடு செல்வதாக சஞ்சய் குமார் ரெட்டி 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார்
