சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர்-பலோடா பஜார் சாலையில் உள்ள சரகான் அருகே பனார்சி கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மக்கள் மினி லாரியில், வீடு திரும்பி கொண்டு இருந்தனர். 50 பேர் அந்த லாரியில் கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த கனரக சரக்கு வாகனம் மினிலாரி மீது மோதியது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.