Skip to content

பொள்ளாச்சி ஜிஎச்-ல் செவிலியர்கள் அலட்சியம்-கூலித்தொழிலாளி புகார் மனு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியப் போக்கு கூலி தொழிலாளி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் மனு
பொள்ளாச்சி-மே-12
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மரப்பேட்டை பகுதியில் வசிக்கும் சுமைதூக்கும் தொழிலாளி நாகராஜ் என்பவர் தனது மகள் தீபா (வயது 23) என்பவருக்கு அதிகாலை ஐந்து மணிக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தனது மகளின் நிலையை பணியில் இருந்த செவிலியரிடம் எடுத்து கூறி உள்ளார் ஆனால் சிறிதும் கண்டுகொள்ளாத செவிலியர் நீண்ட நேரம் செல்போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். நோயாளிக்கு சீகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் வலியால் துடித்து கொண்டு இருந்த தனது மகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் . பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அலட்சியமாக செயல்படும் மருத்துவர்கள் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

error: Content is protected !!