தென் மேற்கு பருவமழை மூலம் இந்தியாவின் பெரும்பகுதி மழை பெறுகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.வழக்கமாக மே 4வது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தியாவின் முக்கியமான நிலப்பரப்பில், முன்கூட்டியே பருவமழை தொடங்குவது இதுவாகத்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கி விட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட (ஜுன் 1) நான்கு நாட்களுக்கு முன்னதாக மே 27ம் தேதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இந்த மாதம் மே 27-ம் தேதி கேரளத்தில் அரபிக்கடல் பகுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நிகழாண்டில், வழக்கத்தைவிட 4 நாள்களுக்கு முன்னதாக மே 27-ம் தேதியே தொடங்குவதற்கு சாதகமான சூழல்கள் உள்ளது. ஜூன் 2வது வாரத்தில் கர்நாடகத்தில் மழை தொடங்கலாம்.
கடந்த 2009-ம் ஆண்டு மே 23-ம் தேதி பருமழை தொடங்கியதற்கு பின்பு, இந்தியாவின் முக்கியமான நிலப்பரப்பில், முன்கூட்டியே பருவமழை தொடங்குவது இதுவாகத்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.