Skip to content

கொடும் காயத்திற்கு மருந்தாக பொள்ளாச்சி தீர்ப்பு அமைந்துள்ளது… திருமா..

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பான தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமான் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய,”இந்திய ஒன்றிய அரசு அரசியலமைப்பு  சட்டத்திற்கு எதிராக வக்பு சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.வக்பு திருத்தச் சட்டம் என்பது இசுலாமியர்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல, அரசியலப்பு சட்டத்திற்கு எதிரான தாக்குதல்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வலுவிலக்க வைப்பதே RSS, BJP  செயல் திட்டமாக உள்ளது.மதச்சார்பின்மையை எதிராக பாஜக வளர்ந்து வருகிறது. இந்த மாநாட்டில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என அறைகூவல் விடுக்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என பிரதமர் அறிவிக்கவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தான் சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 2031 மக்கள் தொகை கணக்கு எடுக்கும் போது பாஜக ஆட்சியில் இருக்குமா என்று தெரியவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு என்பது பீகார் தேர்தலுக்கான கண்துடைப்பு.2031 வரை தள்ளி போடாமல் உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.விசிக மனப்பூர்வமாக வரவேற்கிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு 9 பேரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு ஆறுதலை தருவதாக இருக்கிறது. இந்தியாவில் இப்படி ஒரு கூட்டு பாலியல் குற்றம் நடந்திருக்காது என்ற அளவிற்கு மோசமான சம்பவம் பொள்ளாச்சியில் நடந்துள்ளது. சட்டத்தின் படி அதிக பட்ச தண்டனை வழங்கப்பட்டால் தான் கூட்டுப் பாலியலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படும்.
போர் நிறுத்தப்படுவதாக இந்திய, பாகிஸ்தான் அரசு ஏன் அறிவிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. மூன்றாவது நபர் தலையிட்டு பேசுவது தேவையான ஒன்று தான். ஆனால் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்ற சக்தி அமெரிக்கா தான் என்ற தோற்றம் உருவாகிறது. அமெரிக்கா ஏகாதிபத்தியம்  இருப்பதாக  தோற்றம் உருவாகிறது.  கல்லெடுத்து அடியுங்கள் மரத்தை வெட்டி என்ற நிலை மாறி எல்லாரும் படியுங்கள் எல்லோரும் முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த பண்பு மாற்றம் வரவேற்கக் கூடிய ஒன்று. அடங்கமறு, அத்துமீறு என்ற முழக்கம் சாதி அடிப்படையில் சொல்லப்பட்டது அல்ல. ஒடுக்குமுறை, ஆதிக்கத்திற்கு எதிராக போர் குணத்தோடு வெகுண்டு எழ சொல்கிறோம். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து தரப்புகளுகன முழக்கம் இது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதல்முறையாக இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என அன்புமணி பேசியுள்ளார். எப்போதும் இவர்கள் இப்படி பேசியது இல்லை. விகித்தாச்சார அடிப்படையில் இடஒதுக்கீட்டை உயரத்த வேண்டும் என்ற கோரிக்கை தான் வைக்க வேண்டும். பரிதாபத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று சொல்வது சமூகநீதி அல்ல. இருப்பினும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது காட்டுகின்றன அக்கறைக்கும், கரிசனதிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
error: Content is protected !!