Skip to content

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின்..

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் விளையாட்டுதுறை அமைச்சர் யார் என்பதே தெரியாத நிலைதான் இருந்தது. ஆனால், தற்போது வெளிநாட்டு வீரர்கள் இங்கே வந்து கலந்துகொள்ளும் அளவுக்கு விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என 2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போதே நான் பேசியிருந்தேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய தண்டனை வழங்கப்படும். அமித்ஷாவை எதற்காக எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் என்பது நாட்டுக்கே தெரியும். ஆனால், தான் சொல்லித்தான் மெட்ரோ, 100 நாள் வேலை ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி வருகிறார். இந்த மாதிரி Humbug-ஆ பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் அவரின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என கூறினார்.

error: Content is protected !!