தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில் உலக அழகி போட்டி நடந்து வருகிறது. உலக அழகி போட்டிக்கு 28 வெவ்வேறு நிகழ்வுகளுக்கு அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் ஐதராபாத் வந்துள்ளனர்.
அழகிகள் நேற்று ஐதராபாத்தில் உள்ள சார்மினார் கோபுரம் பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். சார்மினார் மற்றும் லாட் பஜாரை அவர்கள் பார்வையிட்டு, நகரத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்து கொண்டனர். 31ம் தேதி ஹைடெக்ஸில் பிரமாண்டமான இறுதிப் போட்டி நடைபெறும்.