தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த மஞ்ச வயல் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது, திருவிழாவை முன்னிட்டு பால் காவடி, சிலா காவடி ப,றவை காவடி ,பால் குடங்கள் ,அலகு காவடி என ஆயிரக்கணக்கான காவடிகள் பக்தர்கள் எடுத்தனர். அத்துடன் இன்று அதிகாலை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் தேரில் விநாயகர் எழுந்தருளினார். இரண்டாம் தேரில் வள்ளி தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து சிற்பு பூஜையுடன் தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.