Skip to content

திருச்சி சரகத்தில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருச்சி காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட திருச்சி கரூர் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வரும் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சிறுகனூருக்கும், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, துவாக்குடி காவல் நிலையத்துக்கும், சிறுகனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், அரியலூர் மாவட்டம் கீழப்பழுருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் இந்த சரகத்துக்கு உட்பட்ட வெவ்வேறு போலீஸ் ஸ்டேசன்களுக்கு பணி அமர்த்தப்பட்டனர். இதனை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்

error: Content is protected !!