திருச்சி கே கே நகர் தென்றல் நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 44) இவர் கடந்த 4 ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் உள்ள சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 12 ந தேதி மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது விட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த பொழுது விட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சத்தியமூர்த்தி கேகே நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்துக்கிடமான ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அந்த வாலிபர் தான் சத்தியமூர்த்தி வீட்டில் வெள்ளிப் பொருட்கள் திருடியது என தெரிய வந்தது. இதைபடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து போது கேகே நகர் சேசாயி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து கேகே நகர் போல சார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்துள்ளனர்.
