தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோடை கால தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, வெள்ளரி, முந்திரி, தர்பூசணி, மோர், சர்பத், நுங்கு, இளநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கழக பொறுப்பாளர் டி.பழனிவேல், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி, மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், திமுக மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் வி. சௌந்தரராஜன் 5 ஆண்டு சாதனைகள் பற்றி விளக்கி கூறினார். முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, முன்னாள் துணை பெருந்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, பொதுக்குழு உறுப்பினரும் தலைமைக் கழக பேச்சாளருமான அப்துல்மஜீத், அயலக அணி அமைப்பாளர் ஜாஜகான், சண்முகநாதன், வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் டி.பன்னீர்செல்வம் , மாவட்ட பிரதிகள் பன்னீர்செல்வம், இள.அரசு, துணை அமைப்பாளர்கள் ஆரோ அருள், டாக்டர் ஆர். சந்திரசேகரன், மருத்துவர் அணி துணை அமைப்பாளர் ஆர்.ராஜு, லெனின், பாலமுருகன், பாரதி, மாவட்ட இலக்கிய அணிஆனந்தராஜ், மற்றும் மருத்துவ அணி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரசு முதல்நிலை ஒப்பந்தக்காரர் சி.துரைராஜ் செய்திருந்தார்.