Skip to content

உதகை மலர் கண்காட்சி…மலர் சிம்மாசனத்தில் முதல்வர் ஸ்டாலின்

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று முதல் மே 25ஆம் தேதி வரை (11 நாள்கள்) மலர் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.125, சிறியவர்களுக்கு ரூ.75 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக 275 வகையான விதைகள், நாற்றுகள் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டு மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டது. மலர் கண்காட்சியை திறந்து வைத்த பின், மலர் அலங்காரங்களை பார்வையிtட்டார், அப்பொழுது அங்கிருந்த மலர் சிம்மாசனத்தில் மனைவி துர்காவுடன் அமர்ந்து முதல்வர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், அமைச்சர்கள் சிலரும் முதல்வர் ஸ்டாலினுடன் மலர் சிம்மாசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தனர். இந்த மலர் கண்காட்சியில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட அரிய வகை பூக்கள், ரோஜாக்கள், ஆர்க்கிட்கள், மற்றும் உள்ளூர் தாவரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
error: Content is protected !!