தஞ்சையை அடுத்துள்ள ராயராம்பட்டி வெண்டையும்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் தஞ்சையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வேலை முடித்து புதிய மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து அவருடைய ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்குடி- திருச்சி செல்லும் சாலையில் ஏதோ அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக சுரேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
