Skip to content

திருச்சியில் 1100 கிலோ ரேசன் அரிசி-ஆம்னி வேன் பறிமுதல்

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம் காமராஜ் நகர் மலையப்பன் நகர் ரயில் நகர் அம்பிகாபுரம் தங்கேஸ்வரி நகர்ஆகிய பகுதிகளில் ரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து சென்றனர். பின்னர் தங்கேஸ்வரி நகர் தெற்கு தெருவில் குடியிருக்கும் தினேஷ்குமார் (வயது 20 ) தனது வீட்டின் திண்ணையிலும், ஆம்னி வேனிலும் 22 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரவு நேர டிபன் கடைக்காகவும் மாட்டுத்தீவனத்திற்கும் கடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்து 1100 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், கடத்த பயன்படுத்திய மாருதி ஆம்னி வேனையும் கைப்பற்றி கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!