Skip to content

தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதிஅக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்..

இந்நிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது..

இதனால் சாகுபடி செய்துள்ள வாழை தார்களுடன் கூடிய சுமார் 10-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதும் சூறைக்காற்றினால் கீழே சாய்ந்து விழுந்து பாதிப்புக்குள்ளானது. இதனால் பிஞ்சு தருவாயில் உள்ள வாழை காய்கள் மற்றும் ஒரு மாதத்திற்கு பிறகு அறுவடை செய்ய வேண்டிய வாழைத்தார்களும் கீழே விழுந்து சேதமாகின

சந்தையில் சாதாரண காலங்களில் மொந்தன் தார்கள் 600-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் 50-ரூபாய்க்கும் ரஸ்தாளி தார்கள் ஜோடி 1500 ரூபாய் விலை போன இடத்தில் 250 ரூபாய் மட்டுமே சந்தையில் விற்பனைக்கு போவதாகவும், வாழைத்தார்கள் வாங்குவதற்கு வியாபாரிகள் மறுப்பதாகவும்,

தற்போது சூறைகாற்றுடன் பெய்த கனமழையினால் முற்றிலும் வாழைத்தார்கள் கீழே சாய்ந்துள்ளதால், முற்றிலும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

இயற்கை சீற்றங்களில் பாதிப்படைந்த விவசாயிகளை அதிகாரிகள் பார்வையிட்டு செல்வதுடன் அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித நிவாரணமும் இதுவரை வழங்கவில்லை கண்ணீர் மல்க தெரிவிக்கும் விவசாயிகள்..

கீழே சாய்ந்து கிடக்கும் வாழை மரங்கள் மற்றும் வாழைத்தார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..

error: Content is protected !!