Skip to content

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகல்

இந்தியா மீது எப்போதும் வன்முறையையும்,  தீவிரவாதத்தையும் கட்டவிழ்த்து விடும் பணியைத்தான் பாகிஸ்தான் செய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானுடன்  கிரிக்கெட் விளையாடுவதையும், அந்த  நாட்டுக்கு இந்திய வீரர்கள் செல்வதையும், அங்குள்ளவர்கள் இங்கு வருவதையும் இந்தியா  தடை  செய்து விட்டது.

உலக கோப்பை போட்டியில் கூட பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால்  அந்த போட்டிகள் கூட  வெளிநாடுகளில் தான் இந்தியா ஆடி வந்துள்ளது.  இந்திய வீரர்கள் பாகிஸ்தான் செல்லவில்லை.

இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் சங்க தலைவராக பாக். மந்திரி மொசின் நக்வி பதவி வகிக்கும் நிலையில் ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு செய்து உள்ளது. அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக மின்னஞ்சல் மூலம் பிசிசிஐ தெரிவித்துவிட்டது.  சமீபத்தில் பாகிஸ்தான்  நடத்திய பஹல்காம் கொடூர தாக்குதலையடுத்து  இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் சூழல் ஏற்பட்டு இப்போது  சற்று ஓய்ந்துள்ள நிலையில்,  இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த முடிவினை எடுத்துள்ளது.

error: Content is protected !!