கரூர் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் விஜய் (25). இவர் ஊர் ஊராக சென்று சர்க்கஸ் நடத்தி வருகிறார். தற்போது தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி பகுதியில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வருகிறார். சர்க்கஸ் நடத்துவதற்காக ஒட்டகத்தை வளர்த்து வருகிறார்.
கடந்த 15 ஆம் தேதி இரவு சர்க்கஸ் காட்சி முடிந்ததும், விஜய் தனது குடும்பத்தினருடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் 16ம் தேதி காலை எழுந்து பார்த்தபோது கூடாரம் பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் பல்வேறு இடங்களில் ஒட்டகத்தை தேடி பார்த்து உள்ளார். ஆனால் ஒட்டகம் கிடைக்கவில்லை. இது குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீசில் விஜய் புகார் செய்தார்.
இதன்பேரில் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.