பல வருடமாக நிலம் அளந்து தர பொள்ளாச்சி சார் ஆட்சியர் மற்றும் தாசில்தார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தெரிவித்த நில உரிமையாளர் பெண்கள். பொள்ளாச்சி-மே-20 கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு தமிழக அரசால் நடத்தப்படும் ஜமபந்தியை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் (எ) கிரிப்பானவர் துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார் விவசாய நிலங்கள் அளந்து தருதல் பட்டா சிட்டா இலவச வீட்டு மனை பட்டா ஏனைய பல்வேறு மனுக்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர் இதில் குறிப்பாக வடக்கி பாளையம், கானல் புதூர், புரவிபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் பல வருடங்களாக குடியிருந்து வருகிறோம் ஆதலால் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என மனு அளித்தனர் இதில் விவசாய நில உரிமையாளர் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் பல வருடங்களாக எங்களது நிலத்தை அளந்து தர சார் ஆட்சியர் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளின் நேரில் சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும் தங்கள் விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம் ஆதலால் தாங்கள் எங்களது நிலத்தை அளந்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர் குறிப்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் முறையிட்ட சம்பவம் அலுவலக வளாகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் வாசுதேவன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
