குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவின் தேரோட்டம் நிகழ்ச்சி, உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
கரூர் மாவட்டம் குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பழைய கோவில் இடிக்கப்பட்டு புதிதாக கோவில் கட்டப்பட்டதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவில் திருவிழா
நடைபெறவில்லை.
தற்போது புதிதாக கோவில் கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 04 ஆம் தேதியன்று சித்திரை திருவிழா கம்பம் ஊன்றுதல் மற்றும் பூத்தட்டுக்கள் கொண்டு வரும் நிகழ்வுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் குளித்தலை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் காவிரியில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு , அலகுகுத்தியும், அக்னிசட்டி, கரும்பு தொட்டில் உள்ளிட்டவைகளை சுமந்து கொண்டு மாரியம்மன் கோவில் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி வெகுவிமர்சியாக நடைபெற்றது.
