தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவரது நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும், விழாக்களை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்த திமுகவின் முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே. என். நேரு, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளர் நியமனத்தில் கட்சியினரிடையே பெரும் சலசலப்பு இருந்து வந்தது. அதாவது மறைந்த மாநகர செயலாளர் செந்திலின் மகனை பொறுப்பாளராக நியமிக்க நேரு நடவடிக்கை எடுத்து வந்தார். இதற்கிடையே புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல்லா எம்.பி. , தனக்குவேண்டிய ராஜேஷ் என்பவரை மாநகர பொறுப்பாளராக நியமித்து விட்டார்.
இந்த நிலையில் உதயநிதி வருகை குறித்து இன்று புதுக்கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதற்காக காலையில் அமைச்சர் நேரு புதுக்கோட்டை வந்தார். நேருவை வரவேற்று மாநகர பொறுப்பாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் ஆங்காங்கே பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று இரவு கட்டப்பட்ட இந்த பிளக்ஸ்களில் உள்ள ராஜேஷ் படத்தை மட்டும் மர்ம நபர்கள் கீழித்து விட்டனர். மற்ற ஒருவரது படத்தையும் சேதப்படுத்தாமல் ராஜேஷ் படத்தை மட்டும்சேதம் செய்துள்ளனர். இது குறித்து ராஜேஷ் போலீசில் புகார் செய்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆராயந்து வருகிறார்கள்.
