திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட பெத்தகல்லுபள்ளி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வார சந்தை, நியாயவிலை கடை, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள், மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட அரசு திட்டங்களை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இன்று களஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து இன்று மாலை நெக்குந்தி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் களந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் பொதுமக்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி
கேட்டறிந்தார்.
அப்போது அங்கு வந்திருந்த அனுமுத்து என்பவரின் மனைவி முனியம்மாள் (70)என்ற மூதாட்டி தனது பெயரில் உள்ள 64 செண்ட் நிலத்தை எனது மகன் மணி ஏமாற்றி எனக்கும் படிக்க தெரியாது கைநாட்டை பெற்றுக்கொண்டு நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் அதனை மீட்டு தருமாறு கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் காலில் விழுந்து மனு அளித்தார்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் மூதாட்டியை அருகில் அமர வைத்து மூதாட்டியிடம் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மூதாட்டியிடம் உறுதி அளித்தார்.
அதனை தொடர்ந்து துறைசார்ந்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்…
