கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள சோலையார் டேம் இடது கரை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை உணவைத் தேடி வீட்டின் கதவை உடைத்துள்ளது அப்போது வீட்டினுள் இருந்த மேரி, மற்றும் தெய்வானை இருவரும் காட்டு யானையை கண்டு தப்பிக்க முயன்றனர் அப்போது யானை தாக்கி மிதித்ததில் மேரி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் மேலும் தெய்வானையை தாக்கி தூக்கி வீசியதில் உடலில் காயங்களுடன் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்., தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் குடியிருப்புக்குள் நுழைந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி… மற்றொருவர் காயம்
- by Authour
