இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தார். பும்ரா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்,சுப்மன் கில் ஆகியோரில் ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டுமென பலரும் கருத்து கூறிவந்தனர். இந்தநிலையில் சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு வௌியிட்டுள்ளது.
