Skip to content

செல்போன் பேசிக்‌கொண்டே பயணம்.. விபத்து அதிகரிப்பு.. திருச்சியில் மநீம கோரிக்கை

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகரில் ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்டில்லாமல் பயணிப்பவர்களை திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை 90சதவீதம் குறைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். இதற்கு காரணம் போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை என்பதோடு, மாநகரில் ஆங்காங்கே பொருத்தப்பட்பட்டுள்ள சிசிடிவி கேமரா வாயிலாகவும் இது சாத்தியமாகியுள்ளது. ஆனால் கத்தி போய் வாள் வந்த கதையாக இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்களை இயக்குபவர்களுக்கு போன் வந்தால், அதனை மறுகனமே எடுத்து பதிசொல்வதை தங்களது தலையாய கடைமையாக கருதுவதால் விபத்து அதிகம் ஏற்படுகிறது. அப்படி என்னதா முக்கியமா போன் வந்தது என்று பார்த்தால் அது கம்பெனி அழைப்பாகயிருப்பது தான் வேடிக்கை. மேலும் வாகனத்தை இயக்குபவர்கள் வாகனம் ஓட்டும் பொழுது செல்போன் பேசக்கூடாது என்பதை மறந்துவிடும் அளவிற்கு தான் அநேக நபர்கள் செல்போன் பேசிகொண்டே திருச்சி மாநகரில் வாகனத்தை இயக்குவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இதில் கொடுமை என்னவெறால் ஹெல்மெட்டிற்குள் செல்போனை வைத்து கொண்டும், மார்கெட்டில் அதிகம் கிடைக்கும் ஹெட் போனை பயன்படுத்தி கொண்டும், கூகுல் மேப்பை பார்த்து கொண்டு போன் பேசியபடியே வாகனத்தை கவனகுறைவாக இயக்குவதால் விபத்து அதிகரிக்கிறது. எனவே திருச்சி மாநகர காவல்துறை கடந்த காலங்களில் ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றி பெற்றதை போல, செல்போன் பேசி கொண்டே வாகனத்தை இயக்ககூடாது என்பதை முன்னெடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, இனி வரும் காலங்களில் செல்போன் பேசிகொண்டே பயணிப்போர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவலர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டு செல்போன் பேசிய படியே வாகனத்தை இயக்குவதை தடுக்க சிறப்பு திட்டங்களை வகுத்து, விபத்துகளை குறைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
error: Content is protected !!