அரியலூர் நகரில் இந்திய ராணுவ வீரர்களின் செந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையில் 20அடி நீள தேசியக் கொடி ஏந்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற இந்திய சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்
நடத்திய தாக்குதலில், 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து மத்திய அரசு செந்தூர் ஆப்ரேஷன் என்ற பெயரில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய முப்படை ராணுவ வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தீவிரவாதிகளை அழித்தனர். இந்திய ராணுவ வீரர்களின் தன்னலமற்ற வீரத்தினை கொண்டாடும் வகையிலும்,
ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், அரியலூர் மாவட்ட பாஜக சார்பில், தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது. அரியலூர் நகரில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பரமேஸ்வரிஆனந்தராஜ் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியினர் கைகளில் தேசிய கொடி ஏந்தியும், 20 அடி நீளம் 20 அடி 20 அகலம் கொண்ட தேசியக் கொடியை முன்னாள் பிடித்து சென்றும்(திரங்கா யாத்திரா) சென்றனர். அரியலூர் – திருச்சி சாலையில் உள்ள ஒற்றுமை திடலில் தொடங்கி, துவங்கி, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தில் யாத்ராவை நிறைவு செய்தனர். ஊர்வலத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள்,மண்டல தலைவர்கள் மற்றும் அனைத்து நிலை கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
