தற்போது தான் மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் உடனே கருத்து சொல்ல முடியாது. மத்திய அரசு விளக்கம் அளித்தால் தான் கூற முடியும். மாநிலங்களவை பதவிகளுக்கு இப்போது தான் தேர்தல் அறிவித்துள்ளனர். பொருமை கடலினினும் பெரிது” என்றார்.
தமிழ்நாட்டில் விரைவில் காலியாகவிருக்கும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைகோ, அன்புமணி ராமதாஸ், வில்சன், எம்.சண்முகம், முகமது அப்துல்லா, அதிமுக MP சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. ஜூன் 2 முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 9ம் தேதி கடைசி நாளாகும்.
