Skip to content

விமானத்தை தவற விட்டதால் உயிர்தப்பிய பெண்

   அகமதாபாத் விமான விபத்தில் ஒரு  பெண்ணும் 10 நிமிட தாமதத்தால் உயிர் தப்பி உள்ளார். குஜராத்  மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர்  பூமி சவுகான்.  சுமார் 33 வயது பெண்.  இவர்   திருமணம் முடிந்ததும் கணவருடன் லண்டன் சென்றார். 2 வருடங்களாக கணவருடன் லண்டனில் வசிக்கிறார்.  விடுமுறைக்காக இவர் மட்டும் குஜராத்  வந்திருந்தார். 

நேற்று இவர் மீண்டும் லண்டன் செல்ல  விபத்துக்குள்ளான விமானத்தில்  முன்பதிவு செய்திருந்தார்.  இவர் வீட்டில் இருந்து சரியான நேரத்திற்கு விமான நிலையம் புறப்பட்டார். வழியில் இவரது வாகனம் டிராபிக் ஜாமில் சிக்கிக்கொண்டது.

ஆனாலும் டிரைவர் பதறியடித்து வேகமாக ஓட்டி வந்தார். அதற்குள்  இவரது விமானம் புறப்பட்டு விட்டது.  அவர் விமான நிலையத்தில் இருந்து திரும்ப முற்பட்டபோது அவர் செல்ல இருந்த விமானம்  வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதை நேரில் பார்த்தார். இதனால் அவர்  அதிர்ச்சியில் உறைந்தார்.

இது குறித்து  கருத்து தெரிவித்த பூமி சவுகான், “விமான விபத்து குறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன், அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. அந்தப் பத்து நிமிடங்களால்தான் என்னால் விமானத்தில் ஏற முடியவில்லை. அதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை”  இது குறித்து என் கணவரிடம் தெரிவித்தேன் எ்றார்.

 

error: Content is protected !!